பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
01.07.2016 அன்றைய தேதியில் குறைந்த பட்ச வயது அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் அதிகபட்சமாக 35 வயதிற்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நபர;கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
இப்பணியிடத்திற்கான இனச்சுழற்சி பொதுப்பிரிவினர் (அ) பொது போட்டி (முன்னுரிமை அற்றவர்கள்) என்பதாகும்.
மேற்கண்ட நிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பத்தினை 17.02.2016 தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.