பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஆலம்பாடி தொகுப்பில் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு) ஒரு காலி பணியிடத்திற்கு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் சிறுவாச்சூர் தொகுப்பிற்குட்பட்ட 10 கிராம ஊராட்சிகளிலிருந்து (சிறுவாச்சூர், கல்பாடி, அய்யலூர், புதுநடுவலூர், நொச்சியம், வேலூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, கவுல்பாளையம் மற்றும் செங்குணம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கான 14.06.2016 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ள எழுத்து தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பின்னர் நேர்முகத் தேர்வுக்கு நடத்தப்பட்டு, சான்றுகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் ஒப்பந்த பணி நியமனம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத தொகுப்பு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 250- வீதம் மாதத்திற்கு ரூ. 7500-(கூட்டமைப்பிற்கான சேவைக் கட்டணம் உட்பட) மற்றும் பயணச் செலவு ரூ. 500- தேர்வு செய்யப்படும் ஊராட்சி குழு கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும்.
இப்பணிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினி இயக்குபவதில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்), சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருத்தல் வேண்டும், 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், சுய உதவிக்குழு நிர்வாகியாக பணியாற்றிருக்க வேண்டும், கிராம பகுதிகளில் பயணம் செய்து பணியாற்ற அனுபவமும் உடற்தகுதியும் உரியவராக இருத்தல் வேண்டும், சொந்தமாக செல்போன் உடையவராகவும், குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பவும், பெறவும் தெரிந்திருத்தல் வேண்டும், இரு சக்கர வாகன உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்க்கண்ட தகுதிகளையுடைய மகளிர் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது விண்ணப்பங்களை 13.06.2016 மாலை 3.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.