Perambalur: Kathikaini, the BJP candidate for Chidambaram constituency, promises to bring maize storage warehouse!

சிதம்பரம் எம்.பி தேர்தலில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று வாக்கு சேகரித்தார். கீழப்புலியூர் கிராமத்தில் வாக்கு சேகரித்த போது, அவர் அளித்த வாக்குறுதி:

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு மக்காச் சோளம் விளைகிறது. அதை தனியார் கொள்முதல் செய்து வருகின்றனர். விவசாயிகள் அதை வைத்து உரிய விலைக்கு அரசு சார்பில் கொள்முதல் கிடங்கை அமைப்பேன், அதோடு அரசே நெல் கொள்முதலை போன்று மக்காச்சோளத்தையும், கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும், விவசாயிகளுக்கு பாரதப் பிரதமர் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். ஜல்ஜீவன் திட்டம், உஜ்வாலா திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், பருத்தி மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்கப்படும். மற்றவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். வெள்ளாற்றில் தடுப்பணை கட்டி வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தீர்ப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஐஜேகே, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், மற்றும் கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!