பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே குழந்தைகளுடன் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டமம், கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30), அவரது மனைவி மங்கையர்கரசி(24), இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, கோகுல்(4), முகேஷ்(3) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12ந்தேதி வீட்டில் தனியாக இருந்த மங்கையர்கரசியிடம் அதே ஊரைச்சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று மறைத்து வைத்துள்ளதாகவும்,
மணிகன்டன் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்துள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அனுப்பி வைக்க கேட்டதற்கு மணிகண்டனின் பெற்றோர்கள் ஆனைமுத்து(48), மூக்காயி(40) ஆகியோர் தகாதா வார்த்ததைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாக குன்னம் காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் குன்னம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.