Perambalur: Kumbabhishekam at Madurai Veeran Sami Temple at Poolampady; Devotees including industrialist DATO S PRAKADEESH KUMAR attended.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அருந்ததியர் தெருவில் உள்ள மதுரைவீரன் சாமி கோவில் கும்பாபிஷேகத்தில் பன்னாட்டு தொழிலதிபரும், பூலாம்பாடியை சேர்ந்தவருமான டத்தோ பிரகதீஸ்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டனர்.

பூலாம்பாடி கிராமத்தில் செல்வ விநாயகர், செல்வ மாரியம்மன், பொம்மியம்மா, வெள்ளையம்மா உடனுறை மதுரை வீரன்சுசாமி, நவக்கிரஹம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக திருப்பள்ளி எழுச்சி, திருமறை பாராயணம், நவசக்தி பூஜை, பிம்பசாந்தி, சுவாமிகளுக்கு நேத்ராயம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், நாடிசந்தானம் யாத்ராதானம் போன்றவை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடம்புறப்பாடும் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மஹாதீபாராதனை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பூலாம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டார். அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர். கும்பாபிஷேகத்தில் கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, கலைச்செல்வி பாலு மற்றும் பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, உடும்பியம், பெரியம்மாபாளையம், அரும்பாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார பதியை சேர்ந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!