மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட ஏற்கனவே பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, வீடியோ சர்வைலன்ஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மேலும், புதிதாக தலா 11 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அதில் தெரிவிப்பட்டதாவது:
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பறக்கும் படை மற்றும் தீவிர கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அசம்பாவிதங்கள் மற்றும் குற்ற செயல்கள் ஏதும் ஏற்படாத வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பெரம்பலூர் தொகுதிக்கு 11 குழுக்களும், குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கு 10 புதிய பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு குழுவிற்கு 3 மண்டல அலுவலர்கள் தலைமையிலான தனித்தனி குழுக்கள் என 10 குழுவிற்கு 30 மண்டல அலுவலர்களின் குழுக்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளளனர்.
அதனடிப்படையில் பி.வரதராஜ் (9894573951), பி.சிவக்குமார் (9486789001), பி.ஆனந்தன் (9486311707), வி.பெரியசாமி (9443905346), ர.அறிவழகன் (9042115162), சி.ராமதாஸ் (9750982658), ஜெ.சரவணன் (9489247875), அ.ஜெயச்சந்திரன் (9443530309), எம்.இமயவரம்பன் (9626614670), மு.நஜீர் அஹமத் (9751720605), ப.ஸீடீபன் அந்தோனி சாமி (9843392343), எம்.சுப்ரமணியன் (9944844145), எம்.குமார் (9790631729), ப.பால் (9965486860), க.மாயவேல் (9442478736), எஸ்.கலையராஜா (9787492423), எம்.மாரிமுத்து (9840299475), சி.அண்ணாதுரை (9443954646), டி.ராஜேந்திரன் (9943509509), ந.செந்தில்நாதன் (9042964135), எஸ்.ராஜசேகரன் (9585518920), எம்.செல்வம் (9626319518), வி.சங்கரன் (9790631729), ந.ராஜசுவாமிநாதன் (9443368770), சி.ராமச்சந்திரன் (7639914464), அ.பொய்யாமொழி (7402704470), ஆர்.நல்லுசாமி(7373029128), டி.ஜெயராஜ் (9659339768,9443856058), ஆர்.சரவணன் (7708045139) ஆகிய மண்டல அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் செயல்படவுள்ளன.
அதேபோல, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு குழுவிற்கு 3 மண்டல அலுவலர் கள் தலைமையிலான தனித்தனி குழுக்கள் என 11 குழுவிற்கும் 33 மண்டல அலுவலர்கள் குழுக்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.செல்வகுமார் (9443703001), எஸ்.செல்வமணியன் (9994687102), கே .சின்னப்பையன் (9487335087, 7094929363), பி.அசோகன் (9597559920), பி.பாலமுருகன் (9442167434), ஆர்.ஆறுமுகம் (8015512533), ஆழ்வார்குமார் (9443445662), பி.இளங்கோவன் (9750982661), சேகர் (8608068445), கே.கோவிந்தன் (9443307433), பி.ஆறுமுகம் (9600801500), எ.சிவபிரகாஷ் (9842470358), கிருஷ்ணமூர்த்தி (9443004156), அறிவழகன் (7845495936), மருதமுத்து (9443919905), அரப்பலி (9486060816), எஸ்.வரதராஜன் (9976078307), என்.லோகநாதன் (9442537892), எஸ்.ஆர்.மோகன் (9965088078), வெங்கடேஷ்வரன் (7402702753), படைகாத்து (8489072929), எஸ்.இளங்கோவன் (9750982657), சித்தார்த்தன் (9994567261). ராஜேந்திரன் (9047072744), பி.கருணாநிதி (9443087384), திரு.ஆர்மனோகர் (9443150555), பி.மணிவேல் (9840908088), டி.நாகராஜன் (9442107009), கே.பழனி (9566281420), எஸ்.செந்தில்குமார் (9786045746), பாலா (8428994851), கே.வெங்கடேஷன் (9445029470) உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும்,
இக்குழுக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த பட்ச நாள்களே உள்ள நிலையில் தேர்தல் சட்ட விரோதமாக பணம் வினியோகம், மது வினியோகம் உள்ளிட்ட குற்ற செயல்கள் நடைபெறுகின்றனவா என்று தீவிர கண்கானிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு வரும் புகார்கள் உடடியாக இந்தக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.