பெரம்பலூர்; இந்தியை ஒழிக்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த திமுக தலைவர் கருணாநிதியின் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சரான அமைச்சரான ஆ.இராசா தலைமையில் கேந்திரிய வித்யாலய பள்ளி கொண்டு வரப்பட்டது.
அரசியல்வாதி மற்றும், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் மட்டும் படிக்கும் வகையில் இப் பள்ளி உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகள் எல்லாம், ஆங்கிலம் ஹிந்தி பயிலக்கூடாது , தரமான கல்வி பெறக் கூடாது என்ற நோக்கிலேயே இந்தப் பள்ளி கொண்டு வரப்பட்டுள்ளது.
உழைக்கும் பட்டாளி வர்த்தினரின் குழந்தைகள் தரமான கல்வி பெற போராடி வருகின்றனர். ஹிந்தி தார் பூசி அழித்த ஒரு எம்.பி லட்சணக்கில் பணம் பெற்றுக் கொண்டு தனக்கு ஒதுக்கபட்ட இடங்களை தலித்துகளுக்கு கூட வழங்காமல் தலித் அல்லாதவர்களுக்கே வழங்கினார்.
இதே மற்ற எம்.பி களும் லட்சணக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டே இதுநாள் வரை தங்கள் கோட்டா (ஒதுக்கீடு) சீட்டுகளை வழங்கி வருகிறார்கள் என்பது மறுபுறம் இருக்க … தனியார் பள்ளி கட்டண கொள்ளை களுக்கும், அரசின் தரமற்ற கல்விக் கொள்கைக்கு பயந்த பலரும் தங்களது பிள்ளைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துள்ளனர்.
பள்ளிக்கு போதுமான வசதியின்மையால் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒன்று அமைத்து, அதில் பள்ளி மாணவர் தலா ரூ.25 ஆயிரம் வீதம், 540 மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து வசூலித்த ரூ.78 லட்சத்தை அரசு அனுமதி பெற்று பெரம்பலூரில் உள்ள கோவில் நிலத்தை விலைக்கு வாங்கி பள்ளியின் பெயரிலேயே பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்நிலத்தை அரசாங்கமே இரண்டு பக்கங்களில் தலா 100 அடியை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த ஆர்.டி.ஓ பேபி பெற்றோர்களிடம் சமாதானப் பேச்ச வார்த்தை நடத்தினார்.
பின்னர் முற்றுகையிட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.