Perambalur: Lamps, cookers, Tawa, pans brought without proper documents confiscated
பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டி சோதனை சாவடி அருகே ஆலத்தூர் டி.எஸ்.ஓ ஜெயராமன் தலைமையிலான பறக்கும் படையினைர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஈரோட்டில் இருந்து செந்துறை நோக்கி சென்ற டாட்டா ஏசி மினி லாரி வண்டியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குத்துவிளக்கு, குக்கர், தோசைக்கல், எண்ணெய் சட்டி மற்றும் வடைசட்டி அடங்கிய 71 அட்டைப் பெட்டிகளை கொண்டு செல்வதை கண்டறிந்த, பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து, பெரம்பலூர் ஆர்.டி.ஓ அலுலகத்தில் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 74 ஆயிரத்து 550 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.