Perambalur lawyers boycott court work!
பெரம்பலூர் பார் அசோசியேஷன் நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், நிறைவேற்ப்பட்ட தீர்மானங்களின் படி இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆர். ராஜேஷ, ஸ்டாலின் ஆகியோர்களை கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளர்கள் கடுமையாக தாக்கியதையும், வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு போட்டதையும், மதுரை வழக்கறிஞர் எம். அலெக்சாண்டர் தேவநேசன் மீது மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய போலீசார் பொய் வழக்கு போட்டதை கண்டிக்கும் வகையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளில் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோ போல், பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றம் பெரம்பலூரில் நிறுவிட வலியுறுத்தியும், பெரம்பலூரில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சிறப்பு நீதிபதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டியும், பெரம்பலூரில் கூடுதல் சார்பு நீதிமன்றம் விரைவில் அமைத்திட ஆவன செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாளும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டுள்ளது.
பெரம்பலூர் பார் அசோசியேஷன் செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.