Perambalur lawyers to boycott court from tomorrow, demanding withdrawal of Hindi and Sanskrit law amendments!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் அவசர கூட்டம், சங்கத் தலைவர் இ.வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில்,
முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹிந்தி, சமஸ்கிருத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்று ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி முப்பெரும் சட்டங்களை மீண்டும் (01-07-2024) நாளை முதல் நடைமுறைபடுத்த வேண்டி பலமுறை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் வழக்கறிஞர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றபடவில்லை.
எனவே, முப்பெரும் சட்டங்களை ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி 01-07-2024 முதல் நடைமுறைபடுத்த வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி நாளை திங்கள் கிழமை முதல் வரும் 08-07-2024 திங்கள் கிழமை வரை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து சங்க உறுப்பினர்கள் விலகியிருப்பதென ஏகமனமதாக தீர்மானம் செய்யப்பட்டது. கூட்டத்தில், செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி.சிவராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.