Perambalur: Liquor bottles brought without proper documents confiscated!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் அருகே தனிவட்டாட்சியர் புகழேந்தி பெருமாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று, அரியலூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லூருக்கு சென்றது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படையைச்சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் த.இளஞ்சியம் பாட்டில்களை பறிமுதல் செய்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.