Perambalur: Liquor bottles worth Rs.51,000 seized without proper documents!
2024 எம்.பி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகளும், தலா 9 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், அம்மாபாளையம் பகுதியில் பெரம்பலூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அம்மாபாளையம் டாஸ்மாக் அருகே விற்பனை செய்து கொண்டிருந்த, ரூ.51,000 மதிப்பிலான 180 ml அளவுள்ள 340 ஓல்டு செஃப் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.