Perambalur : Load auto-moped collision accident; Husband killed! Wife seriously injured!! Police investigation!!
பெரம்பலூர் அருகே இன்று எசனை அருகே லோடு ஆட்டோவும், பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் மொபட் ஓட்டி வந்த கணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தொட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவீரன் மகன் கலியபெருமாள் (55). அவரது மனைவி பூமதி (49) இருவரும் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட புறப்பட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.
மொபட், ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில், வேப்பந்தட்டைக்கும், எசனைக்கும் இடைப்பட்ட காமராஜர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே பெரம்பலூரில் வைக்கோல் இறக்கி விட்டு விட்டு, பூலாம்பாடிக்கு திரும்பி கொண்டிருந்த லோடு ஆட்டோ முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த கலியபெருமாள் – பூமதி வந்த மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பூமதிக்கு தலை மற்றும் கை, கால்களில் ரத்தக் காயங்களுடன் பெரம்பலூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், வழக்குப் பதிவு, பூலாம்பாடி பஜனை மடத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவக்குமா (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி கும்பிட வந்த வந்தவர் வழியிலேயே இறந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை போலீசார் சீர் செய்தனர்.