பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் நேற்றிரவு சாலை தடுப்பு சுவர் மீது மோதிய ஏற்பட்ட லாரி சேதமடைந்து தீ பற்றி எரிய துவங்கியது.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி மினி லாரி ஒன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த ராஜூ மகன் கணேசன் (46) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே நேற்றிரவு வந்தபோது, சாலையோரம் இருந்த தடுப்பு சுவற்றில் மினி லாரி மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
இதையறிந்த லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர். இதில், லாரியின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.