Perambalur: Lorry collided with an accident, a person who was walking on the river bridge was killed!
பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நடை பயிற்சி (வாக்கிங்) சென்ற வாலிபர் மீது லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி திருமஞ்சன வீதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை மகன் பாண்டியன் (53) இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் சிவானி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்
இந்நிலையில் இவர் வழக்கம் போல் அகரம்சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர் பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.