Perambalur: Love Affair! A teenager committed suicide by jumping from a running bus!
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு நேற்றிரவு அரசு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. பேருந்து அடைக்கம்பட்டடி நோக்கி வந்து கொண்டிருந்த போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர், திடீரென செல்போனில் பேசிக் கொண்டே ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக தாவிக் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு, வாலிபரை அருகில் சென்று பார்த்த போது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வினோத் (22) என்பது தெரியவந்தது. 10 வது படித்துள்ளார். பூக்கடையில் பூக்கட்டும் வேலையை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு, பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் 3 வருடம் தீவிர காதலித்து வந்துள்ளனர். இருவரும் உயிருக்கு உயிராய் நேசித்த நிலையில் காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் காதலியுடன் செல்போனில் சமாதானம் பேசிய போது, சமாதானம் ஆகாததால், உயிரை விட்டு விடப் போவதாக கூறிய நிலையில் காதலி சமாதானம் ஆகாததால், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து காதலின் ஆழத்தை காதலிக்கு நிரூப்பித்துள்ளார்.
இச்சம்பவம் பெரம்பலூர் மற்றும் துறையூர் வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.