Perambalur: Madanagobala swamy and Brammapureeswarar Temples Opening Hundiyal!
பெரம்பலூர் நகரத்தில் ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா முடிந்ததும் உண்டியல் எண்ணுவது வழக்கம். அதன்படி, தக்கார் ம.லட்சுமணன், செயல் அலுவலர் கோவிந்தராஜன், திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி, ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது, திருக்கோயில் ஊழியர்கள், கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்ஆர்வல தொன்டர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணி சரிபார்த்தனர்.
முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உடன் இருந்தார். உண்டியலில் ரூ.2,96,675 ரெக்கம், தங்கம் மற்றும் வெள்ளி மதிப்பு சுமார் ரூ.30,000 ஆகியன திருக்கோயில் உண்டியலில் இருந்து பெறப்பட்டது.