Perambalur: Maize value addition operation; DMK candidate Arun Nehru confirmed!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார்.வேப்பந்தட்டை பகுதியில் பெண்கள் ஆரத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் -கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, திமு.க.ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை கூறி வேப்பந்தட்டை பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசுகையில், இது என் சொந்த ஊர், எப்போதும் வருவேன், இந்த பகுதியில் விளையும் மக்காச்சோளத்திற்கு மதிப்புக் கூட்டு செய்யப்படும் எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு வேப்பந்தட்டை, அம்பேத்கர் நகர், பாலையூர்,தொண்டப்பாடி, நெய்க்குப்பை,என்.புதூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், சிறுவயலூர், அனுக்கூர், குடிக்காடு,வி.ஆர்.எஸ்.புரம்,பிரம்மதேசம்,எம்.ஜி.ஆர்.நகர், வல்லாபும், வாலிகண்டபுரம், தம்பை,தேவையூர்,ரஞ்சன்குடி, மங்களம், மங்களமேடு, சின்னாறு, SLR காலணி, எறையூர், சமத்துவபுரம், அயன்பேரையூர், தைக்கால், மேட்டுச்சேரி, மறவநத்தம், வி.களத்தூர், வண்ணாரம்பூண்டி, மில்லத்நகர், இனாம்அகரம், திருவாளந்துறை, ராம்ஜி நகர் உள்ளிட்ட வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் தோறும் தி.மு.க.ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.
பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம்,
துணைத் தலைவர் எம்.ரெங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி செயலாளர் செல்லதுரை,ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன் ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன்,ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, வனிதா சுப்ரமணியன், வெள்ளச்சாமி மற்றும் ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.