Perambalur: Man arrested for selling banned lottery tickets
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இன்று மாலை ரோந்து சென்ற போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட், அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் பார்த்திபன் (48), என்பதும், அவர் விற்பனை செய்து வந்த, வேறு மாநிலத்தை சேர்ந்த 15 லாட்டரி சீட்டு கட்டுகள் ரொக்கம் ரூ. 400-ம் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார், பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.