பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
குடிமக்களாய் இருக்கும் அனைவரும் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பெண்குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாராத்தான் ஓட்டம் வரும் ஜன 24 (ஞாயிறு) அதிகாலை 5 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இந்த தொடர் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் இருந்து தொடங்கி, குரும்பலூர் பாளையம் வரை செல்லும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் 21.1 கி.மீட்டர் தூர ஓட்டம் மற்றும் 10 கி.மீட்டர் தூர ஓட்டம் என 2 பிரிவாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு ஓட்டங்களிலும் தனித்தனியே முதலாவதாக வரும் ஆண், பெண் இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.10,000 வீதம், இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.40,000 மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.5,000 வீதம்; இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.20,000 மும் வழங்கப்பட உள்ளது.
இதுவரை மாராத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ள 500க்கும் அதிகமானோர், தங்களது விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் ஜன 22 வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஆர;வமுடையவர;கள் விரைவில் தங்களது பெயர; மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம்.
மேலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை , www.perambalurmarathon.in என்ற இணைய தள முகவரியிலோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ சனிக்கிழமை 22.1.2016 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
21.1 கி.மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் மாரத்தான் ஓட்ட நாளான 24.1.2015 அன்று அதிகாலை 5 மணியளவிலும், 10 கி.மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்பவர்கள் 5.30 மணியளவிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பிற்கு தவறாது வந்து விட வேண்டும். இந்த தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள பதிவு செய்பவர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 9788532233, 7373003579 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மாரத்தான் ஓட்டங்களில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஒரு டி – சர்ட் வழங்கப்படும். இந்த மாராத்தான் ஓட்டங்களை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், மாரத்தான் ஓட்டத்தினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். மாணவ,மாணவிகளும் – பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு மாராத்தான் போட்டியினை சிறப்பிக்க வேண்டுகின்றேன், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.