Perambalur: Maruthuvar Sangam decided to ignore the parliamentary elections!
பெரம்பலூர் மாவட்ட மருத்துவர் (முடி திருத்துவோர்) நலச் சங்க செயற்குழு கூட்டம் சோழா மீட்டிங் ஹாலில் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்5% சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும், முடி திருத்துவோருக்குஇலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கவில்லை, முடி திருத்துவோர்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும், அனைத்து கட்சிக்கும், முன்கூட்டியே, தேர்தல் அறிக்கையில் தங்களுக்கும், அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எந்த கட்சியும் அறிவிப்பு செய்யவில்லை என்பதை கண்டித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தேர்தலை புறக்கணிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மோகன் முன்னிலை வகித்தார். செந்தில்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாநில மண்டல அமைப்பு செயலாளர் செந்தில்குமார், நகரசெயலாளர் ராஜா, நகர பொருளாளர் தங்கராசு, வேப்பந்தட்டை குமரவேல், செட்டிக்குளம் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாநில மாவட்ட பொறுப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.