Perambalur: MCP Camp in Kolakkanantham Village!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில், வரும் 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, கொளக்காநத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொளக்காநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.