பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் 19.2.2016 மற்றும் 20.2.2016 ஆகிய தேதிகளில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 100 ஆண்கள் மற்றும் 65 பெண்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கான தடகளம் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ, ஓட்டப் பந்தயப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.அலெக்ஸாண்டர் முதலிடத்தையும், 200 மீ, 800 மீ, ஓட்டப் பந்தயப் போட்டிகளில், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசரியர் பி. ரவி முதலிடத்தையும்,
நீளம் தாண்டுதல் போட்டியில் என். அருள், அரசு உயர் நிலைப் பள்ளி, கீழமாத்தூர், முதலிடத்தையும், உயரம் தாண்டுதல், போட்டியில் வேளாணமைத் துறை அலுவலர் அ. முருகராஜ் முதலிடத்தையும்,
குண்டு எறிதல் போட்டியில் எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பி. கோபி முதலிடத்தையும், 4 x100 மீ தொடர் ஓட்டப் போட்டியில் பள்ளிக் கல்வித் துறையினைச் சேர்ந்த என்.அருள், ஆர்.சக்திவேல், ஆர். அன்புசெல்வன், பி. செல்வகுமார், ஆகியோர் முதலிடத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான தடகளம் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ, 400மீ மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கல்வித்துறையை சேர்ந்த சின்னவெண்மணி எஸ். அபிராமி, நீளம் தாண்டுதல் போட்டியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்.மேகலா, வேப்பந்தட்டை முதலிடத்தையும், வென்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் போட்டிகள் முறையே, கபாடி, டென்னிஸ், மேசைப்பந்து, இறகுப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து (ஆண்கள் மட்டும்) தனித்தனியாக இருபாலாருக்கும் நடைபெற்றது. இப்போட்டிகளில் கல்வித்துறையினைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
இன்று நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார். இவ்விழாவில் பல துறையினைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நன்றியுரை ஆற்றினார்.