Perambalur meeting decides to provide high risk Allowance to road workers!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க பெரம்பலூர் கோட்ட 8வது பேரவைக்கூட்டம் பெரம்பலூர் யூனியன் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோட்ட தலைவர் கே.மணிவேல் கொடியேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஏ.ராஜா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இணைச்செயலர் பி.ராஜ்குமார், வரவேற்புரையும் . மாநில செயலாளர் கே.பழனிசாமி துவக்கவுரை ஆற்றினார் கோட்ட செயலாளர் சி.சுப்ரமணியன் செயலாளா; அறிக்கையும் பொருளாளா; எஸ்.ரஜினி வரவு செலவு அறிக்கையும் அளித்தனா;. மாநில துணைத்தலைவா; எஸ்.மகேந்திரன், சிறப்புரையும் பொதுச்செயலாளார் எ.அம்சராஜ் நிறைவுரையும் ஆற்றினர். முடிவில் இணைச் செயலாளர் கே.கருணாநிதி நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும், சாலைகள் பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவுகளை கைவிட்டு அரசே ஏற்று நடத்தவேண்டும், தொழில்நுட்ப கல்வி திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் 5200 – 20200 தரஊதியம், 1900 நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும், ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்கிட வேண்டும், பணிக்காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி வழங்க வேண்டும், மேலும் கல்வித் தகுதிக் கேற்ப பதவி உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!