Perambalur: Minister Sivashankar inaugurated the 3 bus routes including T. Keeranur, where the bus does not go, and works worth Rs.1.585 Cr.

.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தலைமையில் லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியே 58.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவைகளையும் இன்று தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் முதல் லெப்பைகுடிகாடு வரை சென்ற பேருந்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை வழித்தடம் நீட்டிப்பு செய்தும், லப்பைகுடிகாடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், கச்சிராப்பாளையம் கள்ளக்குறிச்சி வேப்பூர் தெமாழுதார் லப்பைகுடிகாடு வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் இன்று தொடங்கி வைத்தார்.

ஆத்தூர் வி.களத்தூர் தொழுதூர் லப்பைகுடிகாடு வரை இயக்கப்பட்டு வந்த புறநகர் பேருந்தை, இது வரை பஸ்சே போகாத ஊரான தபால் கீரனூர் வழியாக வழித்தட நீட்டிப்பு செய்து இன்று முதல் பேருந்து இயக்கம் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, லப்பைகுடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.54.75 லட்சைம் மதிப்பிலான வட்டார அளவிலான சுகாதார மையம் கட்டும் பணிகள்,பள்ளி மேம்பாட்டு மானிய நிதியின் மூலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டும் பணிகள்,

15வது நிதிக்குழு மானிய திட்டம் மூலம் ஜமாலியா நகரில் ரூ.11.25 லட்சம் மதிப்பில் புதிய பொது சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள், லப்பைகுடிகாடு பேரூராட்சி 1வது வார்டு பிரதான சாலை மாட்டு பாலம் முதல் ஜமாலியா நகர் வரை ரூ.7.50 லட்சம் மதிப்பில் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆகியன இன்று தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் லப்பைகுடிகாட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம், அம்ரித் திட்டத்தின் மூலம் ஜமாலியா நகரில் ரூ.57 லட்சம் மதிப்பில் ப அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் தி.மதியழகன், ராஜேந்திரன், லப்பைகுடிகாடு பேரூராட்சித் தலைவர் ஜாகீர்உசேன், துணைத் தலைவர் ரசூல்அகமது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!