Perambalur: Minister Sivashankar inaugurated the new projects worth Rs 2.81 crore!
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் கலெக்டர் கற்பகம் தலைமையில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.
குன்னம் ஊராட்சியில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் காலனி தெருவில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியினையும், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் கோவில் அருகே சிறு பாலம் அமைக்கும் பணியினையும், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் காலனி தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், அயோத்திதாசர் திட்டத்தில் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனியில் நியாய விலை கடை வரை சாலை வலுப்படுத்துதல் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.16லட்சம் மதிப்பீட்டில் காலனி வடக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.16.04 லட்சம் மதிப்பீட்டில் காலனித் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
மேலும், கொளப்பாடி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதியிலிருந்து ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் ஆய்க்குளம் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் மனக்கட்டு தார்சாலை அமைக்கும் பணிகளையும்,
புதுவேட்டக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5.58 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியும், புதுவேட்டக்குடி ஆதிதிராவிடர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், காடூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இருபுறமும் கழிவுநீர் சரிவர செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் எனவும், அனைத்துப் பணிகளும் தரமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குன்னம் ஊராட்சியில் ரூ.5.50 மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனியில் பைப்லைன் மற்றும் 30 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியினையும், பெரிய வெண்மணி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கொத்தவாசல் நியாயவிலை கடையினையம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.42.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கொத்தவாசல் பள்ளிக்கட்டிடமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
புதுக்குடிசையில் உள்ள சின்னாள் ஓடை வாய்க்காலின் குறுக்கே மக்கள் எளிதில் சென்று வர ஏதுவாக உயர்மட்டப் பாலம் வேண்டும் என்பது கிராம மக்களின் சுமார் 20 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.42.82 லட்சம் மதிப்பீட்டில் புதுக்குடிசையில் கட்டப்பட்ட பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பெருமக்கள் அன்றாடம் பயன்பெறுவார்ககள். இந்த பாலத்தை திறந்து வைத்ததன் மூலம் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிகழ்வுகளில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் பாஸ்கர், கருணாநிதி உள்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.