Perambalur: Minister Sivashankar inaugurated works worth 16.37 crores in Kunnam constituency.
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.16 கோடி 37 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.
குன்னம் பேருந்து நிலையம் அருகில் 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டும் பணியினையும், பேரளி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18.91 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் காலனி முருகேசன் வீட்டு தெரு தார் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் புதிய காலனி தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் மருவத்தூர் – ஆதனூர் தார் சாலை அமைக்கும் பணியினையும்,
சித்தளி ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் பீல்வாடி பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும், எழுமூர் ஊராட்சி எழுமூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும்,
காருக்குடி கிராமத்தில் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சி வைத்தியநாதபுரம் கிராமத்தில் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும்,
ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மகளிர் விடுதி கட்டும் பணியினையும், புதுவேட்டக்குடி ஊராட்சியில் நபார்டு மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் புதுவேட்டக்குடி – லெப்பைக்குடிக்காடு சாலை வேப்பூர் ஆணைவாரியின் ஓடையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும்,
புது வேட்டக்குடி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.93 லட்சம் மதிப்பீட்டில் புதுவேட்டக்குடி ஆதிதிராவிடர் கிழக்கு தெருவில் சாலை பலப்படுத்தும் பணியையும், பேரளி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18.91 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் காலனி முருகேசன் வீட்டு தெரு தார் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் புதிய காலனி தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் என பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.16.37 கோடி மதிப்பீட்டில் 32 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் பேரளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருவத்தூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், சித்தளி ஊராட்சியில் பொதுப்பணிதுறையின் சார்பில் ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பீல்வாடி பள்ளி கட்டிடம், எழுமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காரைக்குடி அங்கன்வாடி மைய கட்டிடம், காடூர் ஊராட்சியில் ரூ.31.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலைய தானியக்கிடங்கு, நல்லறிக்கை பகுதியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் என பல்வேறு பணிகள் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
முன்னதாக அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த செலவில் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான மிக முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகங்களை வழங்கினார்.
ப்
அதனைத்தொடர்ந்து, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் பயிலும் 368 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17,87,800 மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், திமுக பிரமுகர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி மற்றும் டிசி.பாஸ்கர் உள்ளிட்ட ஒப்பந்ததாரர்கள், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.