Perambalur: Minister Sivashankar laid the foundation stone for new projects worth Rs.12.51 crore and inaugurated the completed works!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் கற்பகம், தலைமையில் அடிக்கல் நாட்டினார். மேலும், இரசுலாபுரம் ஊராட்சியில் ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். ஆலத்தூர் ஊராட்சி யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இன்று சீராநத்தம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ. 51,00,000 மதிப்பீட்டில் அல்லிநகரம் முதல் கூத்தூர் வரை செல்லும் சாலையினை மேம்படுத்தும் பணி, நொச்சிக்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.10,35,148 மதிப்பீட்டில் செட்டி ஏரி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணி,

நொச்சிக்குளம் கிழக்குத் தெருவில் ரூ.9,62,624 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.9,60,000 மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் தெருவில் ரூ.4,80,000 மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,

திம்மூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.10,42,022 மதிப்பீட்டில் திம்மூர் ஊராட்சி பெரிய ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல், திம்மூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3,60,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், திம்மூர் ஊராட்சியில் ரூ.9,10,000 மதிப்பீட்டில் சிமெண்ட் களம் அமைத்தல்,

கொளத்தூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.11,15,604 மதிப்பீட்டில் கொளத்தூர் குடிநீர் ஏரி தூர் வாரி தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் படித்துறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

கொளக்காநத்தம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.84,44,000 மதிப்பீட்டில் கொளக்காநத்தம் கருடமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி தார் சாலை அமைத்தல், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50,00,000 மதிப்பீட்டில் வட்டார அளவிலான சுகாதார மையம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் இரசுலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நபார்டு திட்டத்தின்கீழ் புஜங்கராயநல்லூர் – இரசுலாபுரம் இடையே மருதையாற்றின் குறுக்கே ரூ.6,13,95,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாப்பிட்டு பார்த்ததோடு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொளக்காநத்தம் ராகவன், அயினாபுரம் பாலமுருகன், கொளத்தூர் வித்யா மற்றும் நொச்சிக்குளம், இலந்தங்குழி, குரும்பாபாளையம், கூடலூர் ஊராட்சி தலைவர்கள், ஒப்பந்தாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!