Perambalur: Minister Sivashankar laid the foundation stone for the new projects worth Rs. 18.10 crore in Veppur Union and started the unfinished works!

அத்தியூர்- அகரம்சீகூர் பாலம்


தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் கீழப்பெரம்பலூர் முதல் வேள்விமங்கலம் வரை சின்னாற்றின் குறுக்கே ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி, அகரம் சீகூர் ஊராட்சியில் அகரம் சீகூர் புதிய காலனியில் ஆறு தெருக்களில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, ரூ.39.68 லட்சம் மதிப்பீட்டில் அகரம் சீகூர் துணை சுகாதார மையம் மற்றும் பணி,பெண்ணகோனம் ஊராட்சிக்குட்பட்ட கீழக்குடிக்காடு ஆதிதிராவிடர் தெருவில் ரூ.24.12 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாமலை வீடு முதல் அருள் வீடு வரை கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மிளகாநத்தம் ஊராட்சியில் அன்பழகன் வீடு முதல் துரைசாமி வீடு வரை ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட முருக்கன்குடி பி.சி தெரு பிள்ளையார் கோவில் முதல் குடிநீர் கிணறு வழி ஏரிக்கரை வரை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஓர் அடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் மயான சாலை செல்லும் வழியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, கிழுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கை.பெரம்பலூர் சிவன் குளம் முதல் ஜி.ஆர் பட்டணம் ஆற்றங்கரை வரை ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ரூ.15.66 கோடி மதிப்பீட்டில் 53 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

மேலும், துங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது நூலக கட்டிடம், வசிஷ்டபுரம் ஊராட்சியில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அத்தியூர் – அகரம் சீகூர் பாலம், ஒகளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடமும் என 4 பணிகள் ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணிகளையும் அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, ஒப்பந்ததாரர்கள் தழுதாழை சி.பாஸ்கர், கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!