பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம் தேவையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக்கட்டிடத்தினை நகர்மன்ற துணைத் தலைவர் டி.இராமசந்திரன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் நேற்று மாலை திறந்து வைத்தார்.
இதன் மூலமாக தேவையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் இக்கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பயன்பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர்(பால்வளம்) பாலசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையா, கூட்டுறவு சங்கத் தலைவர் செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.