Perambalur MLA R. Tamilselvan presented the costless Dhoti and saree of the Government of Tamil Nadu.
பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி சேலைகளை சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் இன்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது :
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் வெற்றிகரமாக தொடரப்பட்டு, தந்போதைய தமிழக முதலமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் மூலமாக தமிழகத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களும், நெசவாள பெருங்குடி மக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றார்கள்.
மேலும், தமிழக முதலமைச்சர் கிராமப்புறங்களிலுள்ள ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை உறுப்படுத்தும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுடன் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான மக்கள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.