Perambalur MLA who went to the concerned place with the petitioner and insisted to take action!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் நேற்று மதியம் கல்லீரல் பாதிக்க்பட்ட 2 சிறுமிகளுக்கு, அரசின் சார்பில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சென்று முதற்கட்டமாக 2 மாதங்களுக்கான மருந்துகள் மற்றும் ஆ.ராசா வழங்கிய ரூ. 10 ஆயிரம் நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ பிரபாகரனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அதில், ஒரு பெண்மணி கொடுத்த மனுவில், பொதுப் பிரச்சனையாக அவரது குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பேரூராட்சி அதிகாரிகள் முறையாக பதிலளிக்காமல், தட்டி கழிப்பதோடு, அலைகழிக்கவும் செய்கின்றனர். தாங்கள் வசிக்கும் வீடுகளை நோக்கி பாம்பு, உள்ளிட்ட விச ஜந்துக்கள் வலம் வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபித்து கொண்டனர்.

அதனால், மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ பிரபாகரன் சம்பந்தப்பட்ட இடமான தேவராஜ் நகருக்கு நடந்தே சுமார் 100 மீட்டர் தூரம் சென்று பார்வையிட்டார். அப்பகுதிவாசிகள், கட்சியினர், பேரூராட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர். பார்வையிட்ட எம்.எல்.ஏ பேரூராட்சி அலுவலர்களிடமும், பேரூராட்சி பிரதிநிதிகளிடம், சிறு சிறு வேலைகளுக்கு அரசை எதிர்பார்க்காமல் உடனடியாக மக்களுக்கு, வடிகால் வசதி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும், என்று எடுத்துரைத்தார்.

ரூ. ஆயிரம், ரூ. 500 கூடுதலானலும், பொக்லைன் மூலம் மக்கள் பணியை தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர், முதற்கட்டமாக அப்பகுதியில் முளைத்து புல் பூண்டுகளை அகற்றவும், பேரூராட்சி கவுன்சிலர்கள், தலைவர், துணைத் தலைவர், அலுவலர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதன் பேரில் விரைவில் அப்பிரச்சனை சரிசெய்யப்பட உள்ளது. மேலும், தங்கள் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கூறிய எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு நன்றி வழி அனுப்பி வைத்தனர்.

அப்போது, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், மாவட்ட கவுன்சிலர் தழுதாழை டி.சி.பாஸ்கர், யூனியன் சேர்மன் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, பேரூராட்சித் துணைத் துலைவர் செல்வலட்சுமி சேகர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!