Perambalur: MP Constituency AIADMK candidate Chandramohan started campaigning in Sengunam and collected votes!
பெரம்பலூர்: எம்.பி தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் செங்குணத்தில், பிரச்சாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பு!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக சந்திரமோகன் போட்டியிடுகிறார். இன்று காலை செங்குணத்தில் அதிமுக கட்சியினருடன் வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கலுக்கு ரயில் கொண்டு வருவேன். முசிறி -குளித்தலையில் வாழை பதனிடும் தொழிற்சாலை, உள்ளிட்ட திட்டங்களையும், மக்கள் அடிப்படை வாழ்வாதாரம் முன்னேற்ற பாடுபடுவேன் என உறுதி அளித்து பேசினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் மோகன், பரஞ்சோதி, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வக்குமார், ரவிச்சந்திரன், நகர செயலளார் ராஜபூபதி, இணைச் செயலாளர் ராணி, மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், பாலாம்பாடி, அருமடல், கவுள்பாளையம், க.எறையூர், கல்பாடி, நெடுவாசல், எறையசமுத்திரம், அய்யலூர், அ.குடிக்காடு, சிறுவாச்சூர், நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், புதுவேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, மற்றும் ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர், புதூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, கோனேரிப்பாளையம், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி, ஏரிக்கரை, சமத்துவபுரம், எளம்பலூர் பகுதியில் தீவிர சுற்றுப்பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆங்காங்கே கட்சியினர், வரவேற்றும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.