Perambalur MP Constituency: Holiday announcement for liquor shops ahead of elections!
பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் 2024- நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிம் பெற்ற தலங்கள் ஆகியவை அனைத்திற்கும் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரையும், 04.06.2024 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி தினங்களில்; மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக்கூடாது.
மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமாக கற்பகம் தெரிவித்துள்ளார்.