Perambalur MP election: AIADMK candidate Chandramohan files nomination!
பெரம்பலூர் அதிமுக எம்.பி தொகுதி வேட்பாளர் சந்திரமோகன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கற்பகத்திடம் தாக்கல் செய்தார். பின்னர் அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் . அவருடன் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, பரஞ்சோதி, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தேமுதிக மாவட்ட செயலாளர் சிவா.ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, மனு தாக்கல் செய்வதற்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கல்லூரி மற்றும் முசிறி குளித்தலை பகுதியில் வாழைக்கு குளிர் பதனங்கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டல் செய்யும் திட்டத்தை கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.