Perambalur MP election: Arun Nehru filed as an independent candidate in BJP’s proposal!
2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் அதிமுக சார்பில் சந்திரமோகன் என்பவரும் திமுக சார்பில் அருண் நேரு என்பவரும் பாஜக சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர் சுமார் 20வதுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் நிலை உள்ளது.
ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 நபர்கள் போட்டியிடுவதுபோல் பெரம்பலூரில் சுயேட்சையாக அருண்நேரு என்பவர் போட்டியிடுவதால் பெரம்பலூர் நாடாளும் மன்ற தொகுதியில் இரண்டு அருண் நேரு என்ற பெயரில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு எதிராக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் நேருவை பாஜக மற்றும் அமமுவினர் ஏற்பாட்டில் அழைத்து வந்து சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,