Perambalur MP Election: Nomination Filing Begins Tomorrow
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை 20.03.2024 முதல் 27.03.2024 வரை நடைபெறவுள்ளது. இதில் 23.03.2024 சனிக்கிழமை மற்றும் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால் அந்த இரண்டு நாட்களில் வேட்புமனு வழங்க இயலாது. 28.03.2024 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 30.03.2024 ஆகும்.
20.3.2024 முதல் 27.3.2024 வரை உள்ள பணிநாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரிடத்தில் வேட்புமனுக்களை வழங்கலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு செய்ய வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் அனுமதிக்கப்படுவர். காலை 11 மணிக்கு முன்பாகவோ, மதியம் 3 மணிக்குப் பிறகோ வேட்புமனுதாக்கல் செய்ய இயலாது.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாட்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காவல்துறையின் சார்பில் 150 காவலர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.