பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் ஒத்துக் கொள்ளப்பட்ட ஊதியம், தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் , ஆட்சியர் அலுவலகத்திலும் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இத்தொழிற்சாலையில் சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

ஆயிரத்து 300 பேர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 700 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.

இதில் நிரந்த பணியாளர்களுக்கு ஒப்பந்தம் செய்தபடி முறையான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமலும், தரமான உணவு வழங்காமலும், அதிகாரிகள் தரமற்ற வார்த்தைகளை உபயோகித்து மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இன்று காலை சுமார் 9 மணி அளவில், டயர் தொழிற்சாலையின் நுழைவு வாயிற்பகுதியில் முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை நிர்வாகம், தொழிற்சாலைக்குள் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு திரும்பிய 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை வெளியே அனுப்பினால், போரட்டம் தீவிரமாகும் எனக் கருதி தொழிற்சாலைக்குள் சிறை வைத்தனர். நுழைவு வாயிலில் போரட்டம் நடத்திக் கொண்டிருந்த ஊழியர்கள் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் அப்பகுதியில பெரும் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!