Perambalur: Municipal commissioner calls to apply to maintain a Normal Shelter for the poor!
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி ரோட்டில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் நகர்புற வீடற்ற (Normal Shelter) ஏழைகள் தங்கும் விடுதி உள்ளது. இதனை பராமரிக்க முன்அனுபவமுள்ள தகுதி வாய்ந்த தன்னார்வளர் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம், என பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு தகுதியுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை 20.12.2023 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது குறித்த தகவல்கள் நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவற்றை நகராட்சி பொது சுகாதார பிரிவில் அலுவலக நேரத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.