Perambalur municipal employees organized an awareness campaign in shops demanding sorting of garbage!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், பூக்கடைகள், பேக்கரி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மருந்து கடைகள், சலூன்கள், செல்போன் கடைகள், தள்ளுவண்டி கடைகள், பழங்கள், காய்கறிகள் கடைகள் உள்ளன. அவற்றில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் எனத் தனித்தனியாக பிரித்து கொடுத்து நகராட்சி தூய்மைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் எஸ.ஐ சீனிவாசலு, சூப்பர்வைசர்கள் சபரி, குமரவேலு, தற்காலிக தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் வினோத், பிரகாஷ் ஆகியோர் கடைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும், மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பை வகைகளை (வயலட்) கருஊதா நிற தொட்டியிலும் வழங்க வேண்டும் என வணிகர்களிடம் எடுத்துரைத்து துண்டு பிரசுங்களை வழங்கினர். அதில், மேலும், வீட்டிலேயே உரம் தயாரிப்பது குறித்த விவரங்களை விளக்கம் கொண்ட துண்டு பிரசுரத்தை கொடுத்தனர்.

படவிளக்கம்:

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வணிக தூய்மைக்கு ஒத்துழைப்பு வழங்க குப்பைகளை மக்கும், மக்காதவைகள் என தரம் பிரித்து வழங்க கோரி துண்டு பிரசுரங்களை ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளையிடம் நகராட்சி ஊழியர்கள் எஸ்.ஐ. சீனிவாசலு தலைமையில் வழங்கிய போது எடுத்தப்படம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!