Perambalur municipal work should be given priority to those belonging to Perambalur

பெரம்பலூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்வது என நகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராதா, நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்து நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இதில் பெரம்பலூர் இரண்டாம் நிலை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு பரிந்துரைப்பது, தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 231 பேரின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டதால் இன்னும் 3 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம்தேதி வரை பணிபுரிய அனுமதி நீடிப்பது, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் எரிவாயு தகன மேடை ஆகியவற்றை புதுபிக்கும் பணி மேற்கொள்வது, ரூ 4.50 லட்சம் செலவில் அறிவு சார் மைய கட்டிடம் சுற்றிலும் உள்ள தாழ்வான பகுதியினை மேம்படுத்துவது என்பன போன்ற 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக அதிமுக கவுன்சிலர் பழனிச்சாமி, நகராட்சிக்கு ஒதுக்கபட்ட நிதி குறித்து அனைவரும் தெரியும் வண்ணம் அறிவிக்க வேண்டும் என்றார். திமுக கவுன்சிலர் சிவக்குமார் நகராட்சி ஒப்பந்த பணிகளில் பெரம்பலூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பெரம்பலூர்-க்கார்கள் பணி எடுக்க முன்வரவில்லை என்றார் மட்டுமே பிற மாவட்டத்தினற்கு வழங்க வேண்டும், என பேசினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!