பெரம்பலூர் ஆணையர் முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், கடை வாடகை, ஆகியவற்றை உடனடியாக செலுத்தவேண்டும்.
வரிகள் மற்றும் கட்டணங்களை கட்ட தவறும் பட்சத்தில் சொத்துகளின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் கடை உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் உள்ள வசூல் மையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை சனிக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களிளும் வரி செலுத்தலாம். இவ்வாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.