பெரம்பலூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் தீ மிதி திருவிழா : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நன்னை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது இக்கோவில் கடந்த 17 ந் தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து 23ந் தேதி தேதி வரை தினமும் சாமிக்கு, சிறப்பு அபிசேகமும், சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. கரக ஆட்டமும், கலை நிகழ்ச்சியும் நடந்தது
இறுதி நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் தீ மிதி திருவிழா நடந்தது இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர். விழாவில் நன்னை கிராமத்தை சுற்றி உள்ள வேப்பூர், சாத்தநத்தம், வைத்தியநாதபுரம், அகரம், பரவாய், பெருமத்தூர், கிழுமத்தூர், மண்டபம், வடக்கலூர், கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Perambalur Nanai village near the fire walking festival was attended by large number of devotees.