Perambalur near public protest today opeded wine shop was locked
பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தில் இன்று புதிதாக மதுபான கடை திறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று வருகின்றனர்.
ஏப்-1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மொத்தம் 3321 நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 அரசு மதுபான கடைகள் மூடபட்டது, புது வேட்டகுடியிலும் மதுபான கடைமூடப்பட்டது.
அதனை தொடர்ந்து புது வேட்ட குடி அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் உள்ள செங்கமலையார் கோவில் பாதை அருகே புதிதாக அரசு மதுபான கடை இன்று மதியம் 12 மணிக்கு திறந்தது, இத்தகவலை அறிந்த நல்லறிக்கை , புதுவேட்டக்குடி, துணிச்சப்பாடி, ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு புதிதாக திறக்கபட்ட மதுபான கடை முன்பு திரண்டு எங்கள் கிராமத்தில் மதுபான கடை திறக்க கூடாது, மூட வேண்டும் என கோசமிட்டனர்.
அதனை தொடர்ந்து மதுக்கடையை திறந்த சூப்ரவைசர் கண்ணதாசன் கடை விற்பனையாளர் இளவரசன் ஆகிய இருவரும் மதுபான கடையை திரும்ப பூட்டி விட்டு கடைக்கு வெளியே வந்தனர். ஆனால் பெண்கள் சிலர் நீங்கள் உடனே கடையை காலி செய்ய வேண்டும் என்றும், எங்கள் ஊருக்கு அரசு மது பான கடை திறந்தால் நாங்கள் எங்களது வயலில் விவசாயம் செய்ய முடியாது என கூறி கொண்டே அரியலூர் – திட்டகுடி சாலையில் நல்லறிக்கை பேருந்து நிலையம் அருகில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரகூர் வருவாய் ஆய்வாளர் மாலதி, புதுவேட்டகுடி கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கடோஷ் , காடூர் செல்வம் , ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டகாரர்கள் நாங்கள் எங்கள் கிராமத்திற்கு அரசு மதுபான கடையை நிரந்திரமாக மூட வேண்டும், நாங்கள் போராட்டத்தை கைவிட முடியாது என தெரிவித்தனர்.
முடிவில் குன்னம் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் இது சம்மந்தமாக நான் அது சம்மந்தபட்ட உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் உங்கள் கிராமத்தில் திறந்த மது கடையை மூடுவதற்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.