பெரம்பலுார் அருகே கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி மற்றும் மைத்துனரை அரும்பாவூர் போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோனிசாமி (வயது.50), இவரது மனைவி செபஸ்தியம்மாள் (45). கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செபஸ்தியம்மாள், தனது சகோதரன் தனீஸ்கிலாஸ் உடன் இணைந்து அந்தோணியை இன்று வெட்டிக் கொலை செய்துவிட்டு, இயற்கையாக இறந்தது போல், உறவினர்களிடம் தெரிவித்து, இறுதி சடங்கு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் சம்பவம் இடத்துக்கு சென்று அந்தோணிசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, செபஸ்தியம்மாள் மற்றும் தனீஸ்கிலாசை, அரும்பாவூர் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.