Perambalur near the missing gold chain, pawned during the rescue of the identify: Woman arrested
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் மனைவி நந்தினி (வயது 30), இவர் கடந்த 2017 ஆண்டு மே 18 ம் தேதியன்று வீட்டை தாழ் போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் மாற்றம் தெரிந்ததுடன், பீரோவினுள் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க சங்கலியை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் மனைவி பழனியம்மாள் (வயது 40), என்பவர் பெரம்பலூர் ஸ்டேட் பேங் வங்கி கிளையில் அடகு வைத்திருந்த தங்க நகையை மீட்டுள்ளார். அப்போது அங்கு எதேச்சையாக வந்த நந்தினியின் மாமனார் அங்கு வந்துள்ளார்.
அப்போது தனது மருமகளின் தங்கசங்கிலி பழனியம்மாள் வைத்திருப்பதை உறுதி செய்த அவர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனிம்மாளை கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர். அப்போது, ஓர் ஆண்டுக்கு முன்பு நந்தினியின் வீட்டில் இருந்து திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதை அடுத்து அப்பெண்ணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், திருடி போன நகை 5பவுன் தங்கசங்கிலியை பழனியம்மாளிடம் இருந்து மீட்டு, நந்தினியிடம் ஒப்படைத்தனர்.