Perambalur Nehru Yuvakendra, Hope Trust provides certificate, equipment to women entrepreneurs trained!

இந்திய அரசு, இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நேரு யுவ கேந்திரா மற்றும் ஹோப் டிரஸ்ட் இணைந்து 3 மாத கால “பெண்களுக்கான இலவச திறன் அடிப்படையிலான தொழில் முனைவோர் பயிற்சி” 2023-ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்கி, இன்று பயிற்சி நிறைவு விழா பெரம்பலூர் ஹோப் டிரஸட் அலுவலகத்தில், நிர்வாக இயக்குநர் முனைவர்.ஆர்.எஸ். தினேஷ் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும், நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் எஸ். கீர்த்தனா கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் சுயதொழில் செய்ய விரும்புகின்றவர்கள் அவரவர் பகுதியில் உள்ள வங்கி மேலாளர்களை அனுகி வங்கி கடன் உதவி பெற்று தங்களுடைய வருமானத்தை உயர்த்தி கொள்ள இப்பயிற்சி ஏதுவாக இருக்கும்” என்றார்.

பெரம்பலூர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர். பா. தமிழ்பாக்கியா மற்றும் பெரம்பலூர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தண்டபாணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஹோப் டிரஸ்ட் திட்ட அலுவலர் ஆர்.எஸ். திவ்யா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!