பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்திற்கு பெரம்பலூரிலிருந்து கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, வெண்பாவூர், நெற்குணம் வழியாக மாவட்ட எல்லையான நூத்தப்பூர் கிராமத்திற்கு புதிய வழித் தடத்தில் நகர பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து நூத்தப்பூர் கிராமத்தில் புதிய வழித்தடத்தில் டவுன்பஸ் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்து நகர பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் முன்னிலை வகித்து பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் படி நூத்தப்பூர் கிராமத்திற்கு பல்வேறு வழித்தடங்களில் 4 பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயனடைந்து வருகின்றனர் பேசினார்.
இதில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட இணை செயலாளர் ராணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா; குமாரசாமி, மகளிரணி துணை செயலாளர் லெட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர் குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்விநல்லத்தம்பி, அரசு போக்குவரத்து பணியாளர்கள் உட்பட கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.