Perambalur: New works in Alathur Panchayat Union: Minister Sivashankar inaugurated!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிலிமிசை ஊராட்சியில் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 30,000லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியினையும், கூடலூர் ஊராட்சியில் ரூ.33.43 லட்சம் மதிப்பீட்டில் 1,00,000லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியினையும், நொச்சிக்குளம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (2021-2022) கீழ் ரூ.60.73 லட்சம் மதிப்பீட்டில் நொச்சிக்குளம் முதல் அரியலூர் வரை செல்லும் வகையில் தார்சாலை அமைக்கும் பணியினையும், அணைப்பாடி ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் அணைப்பாடி சாலை முதல் கொளக்காநத்தம் – கருடமங்கலம் இணைப்பு சாலையினை தார் சாலைபோடும் பணியினையும், கொளக்காநத்தம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் துணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினையும், என பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஜெமின்பேரையூர் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் கொளத்தூர் ஊராட்சியில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறுபாலம் உள்ளிட்டவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் ஆலத்தூர் ஊராட்சி யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி பிரமுகர் கூத்தூர் செந்தில் மற்றும் கொளக்காநத்தம் ராகவன் உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒப்பந்ததாரர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திட்டப் பணிகளை தொடங்கி அமைச்சர், கூத்தூர், சில்லக்குடி, காரை, கொளக்காநத்தம் உள்ளிட்ட ஊர்களில் பள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறும் வகையில் அமைக்கப்பட்ட வினா – விடை புத்தகங்களையும், அயினாபுரம் மற்றும் அனைப்பாடி கிராம, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் அரியலூர் மற்றும் கொளக்காநத்தம் செல்வதற்கு தினசரி 6 நடைகள் கூடுதல் பேருந்து சேவையினை துவக்கி வைத்தும், பெரம்பலூரிலிருந்து சில்லக்குடி வரை செல்லும் நகரபேருந்தினை காரைப்பாடி வரையும் நீட்டிப்பு செய்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேருந்து சேவையினை தொடங்கி வைத்து வைத்து, மக்களோடு பயணம் செய்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!