Perambalur: Nilgiri DMK MP candidate A. Raja voted in his hometown!
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களிம் பேசியதாவது:
இந்தியாவை காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை காப்பாற்றவும் உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்று முதலமைச்சரின் அழைப்பை ஏற்று 40 ம் நமதே, நாடும் நமதே என்கிற அளவில் இன்றைய தினம் மக்களுடைய மனநிலையை காணமுடிகிறது. தமிழக அரசின் சாதனைகள், பாசிச பா.ஜ.க. அரசின் உளவியல் ஆகியவற்றை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.
ஜாதி,மதம்,ஊழல் கூட்டணி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க. தமிழகத்தில் கால் பதிக்க நினைத்தார்கள். அதை சொல்லி, சொல்லி
பா.ஜ.க.கூட்டணியை முறியடிக்கும் வகையில் முதலமைச்சர் அவர்களின் பிரச்சாரம் அமைந்தது.
இன்றைக்கு இந்தியாவே அவர்களின் கையை விட்டுப்போகிறது.ஒட்டுமொத்த வெற்றியும் முதல்வர் அவர்களுக்கு போய் சேரும். என்று ஆ.இராசா.கூறினார். அப்போது எம்.எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.